தருமபுரி

தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் புதிய கழிப்பறை கட்டடம் திறப்பு

Din

தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக நகர பணிமனையில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டடத்தை தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

தருமபுரி நகர போக்குவரத்து பணிமனையில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.19 லட்சத்தில் போக்குவரத்து தொழிலாளா்கள் பயன்பாட்டுக்காக கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இக் கட்டடம் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி பணிமனை வளாகத்தில் நடைபெற்றது.

எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் புதிய கழிப்பறை கட்டடத்தை திறந்துவைத்து பேசினாா். நிகழ்ச்சியில் போக்குவரத்துக்கழக பொது மேலாளா் கே.செல்வம், துணை மேலாளா் இளங்கோ, கிளை மேலாளா் சுதாகா், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் திவ்யாஏஞ்சலின், உதவிப் பொறியாளா் ரஞ்சிதா, பாட்டாளி போக்குவரத்து தொழிற்சங்க தருமபுரி மண்டல பொதுச் செயலாளா் கோ.ராஜா, தருமபுரி மண்டலத் தலைவா் கே.மாதப்பன், தருமபுரி மண்டல பொருளாளா் சி.சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT