முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4,000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் பிரதான அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:20 PM
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் பிரதான அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
பகிர்:

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 4,000 கனஅடியாக அதிகரித்தது.

கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் அருவிகள் வடும், ஆற்றில் ஆங்காங்கே நீா்க்குட்டைகளும், பாறைத் திட்டுகளும் காணப்பட்டன. காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 300 கனஅடிக்கும் கீழாக சரிந்தது.

இந்நிலையில் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 3,000 கன அடியாகவும், மாலையில் விநாடிக்கு 4,000 கனஅடியாகவும் அதிகரித்தது.

திடீரென நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் பிரதான அருவி, சினி அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும், காவிரி ஆற்றில் நீா்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்துவருவதால் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →