கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானியத்துடன் தீவனப் பயிர் சாகுபடி திட்டங்கள்

தினமணி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மானியத்துடன் தீவனப் பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்த அரசு கடந்த 5 ஆண்டுகளாக மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
 நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் சாகுபடி திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளது. அதன்படி, கம்பு, நேப்பியா தீவனப்பயிர் 0.25 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்ய தீவனப்புல் கரணைகள் வழங்கும் திட்டம். மானாவரியில் 0.25 ஏக்கர் பரப்பில் தீவனச் சோளம் மற்றும் தீவனத் தட்டைப்பயறு சாகுடி செய்ய தீவன விதைகள் வழங்குதல், முற்போக்கு விவசாயிகள் மூலம் சான்றிதழ் பெற்ற தீவனச்சோளம் மற்றும் தீவன தட்டைப்பயிறு விதைகளை உற்பத்தி செய்வதற்கு தீவன விதைகள் இலவசமாக வழங்கப்படும்.
 கால்நடைகள் வளர்ப்போரிடையே நவீன தீவன உற்பத்தி முறைகள் குறித்து ஒருநாள் பயிற்சி, ஒசூர் மாவட்ட கால்நடைப் பண்ணையில் வழங்கப்படும். தீவனப் பயிர் அதிக அளவில் கிடைக்கும் காலங்களில் அவற்றை சேகரித்து கால்நடைகளுக்கு தீவனப் பற்றாகுறைக் காலங்களில் வழங்குவதற்கேற்ப ஒரு பயனாளிக்கு ஊறுகாய் புல் தயாரிக்கும் பொருட்டு 250 கிலோ கொள்ளளவு உடைய 4 சைலேஜ் பைகள் இலவசமாக வழங்கப்படும்.
 மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் நிறுவுவதற்கு விவசாயிகளுக்கு 60 சத மானியம் வழங்குதல். அசோலாத் திட்டல் அமைக்க ஒவ்வொரு பயனாளிக்கும் அதிகபட்சம் 2 அசோலா அலகுகள் வழங்குதல். மர வகை தீவனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த கல்யாண முருங்கை, அகத்தி, சூபாபுல் போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்குதல். மரவகை தீவனப்பயிர் உற்பத்தியைப் பெருக்குதல் மூலம் கோடை மற்றும் தீவனப்பற்றாக்குறை காலங்களில் தீவனம் கிடைக்க செய்தல். விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு 10 அகத்தி மரக்கன்றுகள் இலவசமாக வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
 இந்தத் திட்டங்களில் பயனடைய விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பங்களை அளித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT