கிருஷ்ணகிரி

மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததை திரும்பப் பெறக் கோரி, மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததை திரும்பப் பெறக் கோரி, மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பென்னாகரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் அன்பு முன்னிலை வகித்தார். தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார், மண்டல பொருளாளர் கோபிநாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், மேக்கேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு அணைகட்டக் கூடாது எனவும், அதற்கான அனுமதியை மத்திய  அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும், இதற்கு மாநில அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர். இதில், 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT