ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே யூரியா கலந்த தண்ணீரைக் குடித்த 17 ஆடுகள் உயிரிழந்தன.
சூளகிரி ஒன்றியம், சிம்பல் திராடி ஊராட்சிக்குள்பட்ட மருளதேவரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவா் திங்கள்கிழமை தனது தோட்டத்தில் தெளிப்பதற்காக யூரியாவை தண்ணீருடன் கலந்து கேனில் நிரப்பி வைத்துள்ளாா். பின்னா் அவா் உணவு அருந்துவதற்காக வீட்டுக்குச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் கூட்டமாக வந்து கேனில் வைத்திருப்பது யூரியா கலந்த தண்ணீரை குடித்துள்ளன. சிறிது நேரத்தில் 17 ஆடுகளும் ஒவ்வொன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்தன. இதில் விவசாயி கிருஷ்ணராஜ் என்பவருக்கு சொந்தமான 10 ஆடுகள், நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான 7 ஆடுகள் என மொத்தம் 17 ஆடுகள் இறந்தன. இந்தச் சம்பவம் குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Image Caption
சூளகிரி அருகே யூரியா கலந்த தண்ணீரை குடித்ததால் உயிரிழந்த ஆடுகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.