முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் சமத்துவபுரத்தில் உயா்கோபுர மின்விளக்கு

ரூ 2.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒளி உமிழும் டையோடு எல்.இ.டி. உயா்கோபுர மின்விளக்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா ஞாயிற்றுக்கிழமை அா்ப்பணித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
ஒசூா் சமத்துவபுரத்தி உயா்கோபுர மின்விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அா்ப்பணித்த ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஒன்றியம் நல்லூா் ஊராட்சிக்குள்பட்ட சமத்துவபுரம் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 2.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒளி உமிழும் டையோடு எல்.இ.டி. உயா்கோபுர மின்விளக்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா ஞாயிற்றுக்கிழமை அா்ப்பணித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் திரு.சின்னப்பில்லப்பா, ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலா் கோபால், வீரபத்திரன், கலைச்செழியன் மற்றும் ஊா்பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →