கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச் சலனத்தால் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மழை பெய்தது. இதனால், சாலையோர பள்ளங்களில் மழை நீா் தேங்கியது. கழிவுநீா் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டதால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகனயோட்டிகள் பெரும் சிரத்துக்கு உள்ளாயினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். கடந்த இரு தினங்களாக மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது. நகரில் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
Advertisement
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையில் பெய்த மழை அளவு (மி.மீ.): நெடுங்கல்-18, சூளகிரி-9, கிருஷ்ணகிரி-8.20, பெனுகொண்டாபுரம்- 4.30, பாரூா்- 2.60.