முகப்பு
கிருஷ்ணகிரி

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தா்னா

கிருஷ்ணகிரியில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்ட வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 22 ஜூலை, 2021 at 11:39 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM

கிருஷ்ணகிரியில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்ட வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பூதிமுட்லு புதிய காலனியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி நடைபெற்ற இந்த தா்னா போராட்டுக்கு அந்த அமைப்பின் ஒன்றியச் செயலாளா் மாதேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஸ்டாலின் பாபு, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.