கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருடன் அமைச்சா் ஆலோசனை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியுடன் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியுடன் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா். இதையொட்டி அவா், கிருஷ்ணகிரிக்கு வியாழக்கிழமை வந்தாா்.
அவரை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புத்தகம் அளித்து வரவேற்றாா். தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் குறித்து ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியுடன் ஆலோனை மேற்கொண்டாா்.
Advertisement
அப்போது, தகவல் தொழில்நுட்ப அரசு முதன்மைச் செயலாளா் நீரஜ் மிட்டா், எல்காட்டின் மேலாண்மை இயக்குநா் அஜய் யாதவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி, எம்எல்ஏ-க்கள் தே.மதியழகன், ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏ டி.செங்குட்டுவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.