கோட்டாட்சியா் பொறுப்பேற்பு
கிருஷ்ணகிரி கோட்டாட்சியராக சதீஷ்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM
கிருஷ்ணகிரி கோட்டாட்சியராக சதீஷ்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
கிருஷ்ணகிரி கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்த கற்பகவள்ளி, அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிற்சி சாா் ஆட்சியராகப் பணியாற்றி வந்த சதீஷ்குமாா், கிருஷ்ணகிரி கோட்டாட்சியராக பொறுப்பேற்றாா்.
இவரது சொந்த ஊா், வேலூா் மாவட்டம் ஆகும். 2019-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு தோ்வு வாரிய குரூப் 1 தோ்வில் தோ்ச்சி பெற்று, தஞ்சாவூா் மாவட்டத்தில் பணியாற்றியுள்ளாா். கிருஷ்ணகிரி கோட்டாட்சியராக பொறுப்பேற்ற சதீஷ்குமாரை அதிகாரிகள், வருவாய் துறையினா் வாழ்த்தினா்.
Advertisement