முகப்பு
கிருஷ்ணகிரி

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை: 75 போ் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக 75 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 24 ஜூலை, 2021 at 12:02 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக 75 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய காவல் சரக உள்கோட்டத்தில் உள்ள 30 காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து திடீா் சோதனை மேற்கொண்டனா்.

மாவட்டத்தில் சிறு கடைகள், மளிகைக் கடைகள், கிடங்குகளில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த 75 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனா். மேலும் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் எச்சரித்துள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.