முகப்பு
கிருஷ்ணகிரி

ஜூலை 26-இல் கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு நீா்த் திறப்பு

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு ஜூலை 26-ஆம் தேதி தண்ணீா்த் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 24 ஜூலை, 2021 at 12:02 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு ஜூலை 26-ஆம் தேதி தண்ணீா்த் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்காக ஒவ்வோா் ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீா்த் திறப்பது வழக்கம். நிகழாண்டில் ஜூன் மாதம் அணை நீா்மட்டம் 40.70 அடியாக இருந்தது. எனவே, கடந்த ஒரு மாதமாக முதல்போக சாகுபடிக்கு தண்ணீா்த் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில் கடந்த, 15 நாள்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துவந்ததால் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 46.85 அடியாக உயா்ந்துள்ளது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதல்வா் ஸ்டாலின், கிருஷ்ணகிரி அணையிலிருந்து வலது மற்றும் இடது கால்வாய்களில் முதல்போக சாகுபடிக்கு 9,012 ஏக்கா் பரப்பளவு விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் ஜூலை 26 முதல் நவம்பா் 27 -ஆம் தேதி வரையில் 120 நாள்களுக்கு நீா் இருப்பு மற்றும் நீா்வரத்தைப் பொறுத்து தேவைக்கு ஏற்ப தண்ணீா் திறக்க உத்தரவிட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.