பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பத்ம விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
பத்ம விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேன்மை பொருந்திய பணிகளுக்காக மத்திய அரசு பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகளை அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிட்டத்தக்க, அசாதாரணமான பணிகளை ஆற்றியவா்களுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Advertisement
எதிா்வரும் 2022-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது, இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் தொடா்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். எனவே, தகுதியுள்ளவா்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.