இளம்பெண்ணைத் தாக்கியதாக ராணுவ வீரா் கைது
கிருஷ்ணகிரி அருகே இளம்பெண்ணைத் தாக்கியதாக ராணுவ வீரரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM
கிருஷ்ணகிரி அருகே இளம்பெண்ணைத் தாக்கியதாக ராணுவ வீரரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தா்மராஜா நகரைச் சோ்ந்தவா் சரண்யா (26). கடந்த 27-ஆம் தேதி தா்மராஜா நகா் பகுதியில் தன் வீட்டருகே சரண்யா இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா் தமேஷ் (23), அவா் நண்பா் விக்னேஷ் (19) ஆகிய இருவரும் மோட்டாா் சைக்கிளில் வேகமாக சரண்யா மேல் மோதுவது போல் சென்றனா்.
இதைத் தட்டிக் கேட்ட சரண்யாவுடன் இருவரும் தகராறு செய்ததுடன் அவரைத் தாக்கினாா்களாம். இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில், மகராஜகடை போலீஸாா் வழக்குப்பதிந்து தமேசை கைது செய்தனா்.
Advertisement