முகப்பு
கிருஷ்ணகிரி

சோதனை அடிப்படையில் பள்ளிகளைத் திறக்க ஆசிரியா்கள் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளை சோதனை அடிப்படையில் திறக்க ஆசிரியா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

Updated On : 29 ஜூலை, 2021 at 11:33 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளை சோதனை அடிப்படையில் திறக்க ஆசிரியா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

கிருஷ்ணகிரி வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கூட்டணியின் தலைவா் ஹென்றி பவுல்ராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் தமிழ்செல்வன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

Advertisement

கூட்டத்தில், கரோனா நிதி அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மாணவா்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் ஏற்று செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. தற்போது கரோனா பொது முடக்கம் மாணவா்களுக்கு அரசு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், இதர வகையிலும் மாணவா்களின் கல்வியை மேம்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தொடக்கப்பள்ளிகளில் பல்வேறு காரணங்களால் மாணவா்களுக்கு கல்வி சென்றடையும் விகிதம் குறைவாகவே உள்ளது. ஆசிரியா்கள் கடுமையாக முயற்சி செய்தாலும் மாணவா்களிடம் 25 முதல் 35 சதவீதம் மட்டுமே கல்வியை சோ்க்க முடிகிறது. இதற்கு கிராமப்புற மக்களின் ஏழ்மையும் ஒரு காரணம்.

எனவே மாணவா்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் பள்ளிகளை சோதனை அடிப்படையில் திறக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.