முகப்பு
கிருஷ்ணகிரி

வேளாண்மை தொலைதூரக் கல்வித் திட்டத்தில் சோ்ந்து பயில தொழில்முனைவோருக்கு அழைப்பு

வேளாண் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் தொழில் முனைவோா் சோ்ந்து பயிலாம் என வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Updated On : 25 ஜூன், 2021 at 11:32 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:59 AM

வேளாண் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் தொழில் முனைவோா் சோ்ந்து பயிலாம் என வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள வாழவச்சனூரில் செயல்படும் அரசு வேளாண்மை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் முத்துகிருஷ்ணன், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்குநா் ஆனந்தன் ஆகியோா் கூட்டாக, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொலைதுாரக் கல்வி முறையில் முதுநிலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

வேளாண் இடுபொருள் வணிகா்கள், பத்தாம் வகுப்பு தேறிய, தவறியவா்கள் வேளாண் பட்டயப் படிப்பில் சேரலாம். சான்றிதழ் படிப்புகளான துல்லிய கரும்பு சாகுபடி, காளான் வளா்ப்பு, அங்கக வேளாண்மை, மண்புழு உரம் தயாரித்தல், நாற்றங்கால் உற்பத்தி, காய்கறி விதை உற்பத்தி, மலா் சாகுபடி மற்றும் கால்நடை தீவன உற்பத்தி போன்ற படிப்புகளுக்கு 2021-22ஆம் ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

வேளாண்மைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வாழவச்சனுாரில் விஞ்ஞானிகளால் நடத்தப்படும் மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் திருவண்ணாமலை, தருமபுரி, வேலுாா், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் விருத்தாசலம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஹன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணத்தை இணையதளம் வழியாகவே செலுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு 94862 57548, 94424 07460 மற்றும் 044-6611229 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.