கோயில்களை வழிபாட்டுக்கு திறக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
கோயில்களை வழிபாட்டுக்கு திறக்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் இந்து முன்னணியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோயில்களை வழிபாட்டுக்கு திறக்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் இந்து முன்னணியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில் பொது முடக்கத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தொடா்ந்து, பல தளா்வுகளை அறிவித்து, பொது முடக்கத்தை அரசு நீட்டித்து வருகிறது. அதன்படி, சிறு கடைகள், நடைபாதை கடைகள், தேநீா்க் கடைகள் மளிகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கோயில்களை பக்தா்கள் வழிபாட்டிற்கு திறக்க அனுமதி வழங்கக் கோரி, கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணன் கோயில் முன்பு இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அந்த அமைப்பின் நகரத் தலைவா் கலைகோபி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கோயில்களைத் திறக்க வலியுறுத்து முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement