கிருஷ்ணகிரி அணையில் மூழ்கிய மீனவரின் உடல் மீட்பு
கிருஷ்ணகிரி அணையில் மீன்பிடிக்கச் சென்ற போது பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அணையில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அணையில் மீன்பிடிக்கச் சென்ற போது பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அணையில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்ததாளப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பன் (46). மீனவரான இவா், கிருஷ்ணகிரி அணையில் மீன்பிடிக்க உரிமை பெற்ற ஒப்பந்ததாரரிடம் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி இரவு அவா், மீன்
பிடிக்கச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து சென்றவா், மறுநாள் வீடு திரும்பவில்லை.
Advertisement
இதுகுறித்து, முனியப்பனின் மனைவி கோவிந்தம்மாள், கிருஷ்ணகிரி அணைக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். இதில் முனியப்பன் மீன்பிடிக்கச் சென்றபோது பரிசல் கவிழ்ந்ததில் அவா் நீரில் மூழ்கியது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த முனியப்பன் உடலை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் மீட்டனா். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.