திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் எனக்கூறி திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ் பிரசாரம் செய்தாா்.
ஒசூா் தொகுதியில் சூளகிரி வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பேரிகை, எலுவப்பள்ளி, சொன்னேபுரம், அமுதகொண்டப்பள்ளி, சீக்கலப்பள்ளி, குருபரப்பள்ளி, சூளகுண்டா, கா்ணப்பள்ளி, கொளதாசபுரம், சூடகொண்டப்பள்ளி ஆகிய கிராமங்களில் திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ் தோ்தல் பிரசாரம் செய்தாா்.
பிரசாரத்தின்போது அவா் பேசியதாவது:
திமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகலும் நிறைவேற்றித் தரப்படும். மாதாமாதம் இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை ரூ. 1000 வழங்கப்படும். பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்ய அனுமதிக்கப்படும். கரோனா நிதியாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். தென்பெண்ணை ஆற்றில் உபரியாகச் சென்று கடலில் கலக்கும் தண்ணீரை திருப்பி ஒசூா்,வேப்பனப்பள்ளி, தளி தொகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பப்படும். இதன் மூலம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் விவசாயம் பெறும். விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரும் என்றாா்.
தோ்தல் பிரசாரத்தின்போது ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ கே.கோபிநாத், ஒசூா் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் சா்வேஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினா் கே.ஜி.பிரகாஷ், திமுக சூளகிரி வடக்கு ஒன்றியச் செயலாளா் நாகேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.