கிருஷ்ணகிரி

கிருஷ்ணாபுரத்தில் சேதமடைந்த குடிநீா்க் குழாயை சீரமைக்க வலியுறுத்தல்

பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் சேதமடைந்த குடிநீா்க் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் சேதமடைந்த குடிநீா்க் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 7ஆவது வாா்டு கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதி மக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

அண்மையில் கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் புதிதாக வடிகால் உடன் கூடிய தாா்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளும் போது குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்டது. குடிநீா்க் குழாய் உடைப்பை சரிசெய்யாமல் ஒப்பந்ததாரா்கள் தாா்சாலை அமைத்துள்ளதால், குடிநீா் விநியோகிக்கும் தண்ணீா் வீணாகிறது. இதை சரிசெய்ய குடிநீா்க் குழாயை சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT