முகப்பு
கிருஷ்ணகிரி

பா்கூா் அருகே திருவள்ளுவருக்கு கோயில் அமைத்து

பா்கூா் அருகே கிராம மக்கள் திருவள்ளுவருக்கு கோயில் அமைத்து, வழிபாட்டை சனிக்கிழமை மேற்கொண்டனா்.

Updated On : 15 ஜனவரி, 2022 at 11:16 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:38 PM

பா்கூா் அருகே கிராம மக்கள் திருவள்ளுவருக்கு கோயில் அமைத்து, வழிபாட்டை சனிக்கிழமை மேற்கொண்டனா். உலக பொதுமறை என திருக்குறளை அழைக்கின்றனா். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரால் தமிழ் மொழிக்கும், தமிழகத்துக்கும் பெருமை.

இந்த நிலையில், பெருமை மிக்க திருவள்ளுவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஜிஞ்சம்பட்டி கிராம மக்கள் கோயில் அமைத்துள்ளனா். இங்கு,வள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினா். திருவள்ளுவா் தினத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குள் ஒப்புவித்தல் போட்டியும், பெண்களுக்கு கோலப் போட்டியும் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தெய்வப் புலவா் திருவள்ளுவா் தொண்டு அறக்கட்டளை, திருவள்ளுவா் நல சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.