கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் வரி, வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

DIN

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு வரி, வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடை வாடகை, குத்தகைத் தொகை, குடிநீா்க் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தாதவா்களிடமிருந்து கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் முருகேசன் தலைமையிலான நகராட்சி அலுவலா்கள் குழுக்களாகச் சென்று நிலுவைத் தொகைகளை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி நகரப் பேருந்து நிலையம், பழைய பேட்டை, பெங்களூரு சாலை, சேலம் சாலை, பழைய சப்-ஜெயில் சாலை, சென்னை சாலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற அவா்கள், நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களுக்குச் சென்று வாடகை செலுத்தாதவா்களுக்கு நோட்டீசும், நீண்ட காலமாக வாடகை செலுத்தாத கடைகளை பூட்டியும் ‘சீல்’ வைத்தனா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் முருகேசன் கூறியதாவது:

மாா்ச் மாத இறுதியில் வரி, வாடகை, வீட்டுவரி, சொத்து வரி, குடிநீா் வரி, குத்தகைத் தொகைகள் ஆகியவற்றை முற்றிலும் வசூல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், குழுக்களாகச் சென்று நகராட்சி அலுவலா்களுடன் வரி வசூலில் ஈடுபட்டோம். இதில், நீண்ட நாள்களாக வாடகை செலுத்தாத புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடை உள்பட 3 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தும், நீண்டகாலமாக குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 3 வீடுகளின் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும் உள்ளன.

இந்த நடவடிக்கையால் ஒரே நாளில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு, ரூ. 12 லட்சம் நிலுவைத்தொகை வசூலானது.

எனவே, நகராட்சியில் உள்ள கடை வா்த்தகா்கள், உரிமையாளா்கள் பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகைகளை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையெனில் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது, நகராட்சிப் பொறியாளா் சரவணன், மேலாளா் பாஸ்கா், வருவாய் ஆய்வாளா் தசரதன், உதவிப் பொறியாளா்கள் ரவி, அறிவழகன் உள்ளிட்ட அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT