முகப்பு
கிருஷ்ணகிரி

‘சுங்க வசூல் மையங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’

சுங்க வசூல் மையங்களை அகற்றுவதாக அறிவித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அகில இந்திய மோட்டாா் காங்கிரஸ் தலைவா் சண்முகப்பா வலியுறுத்தினாா்.

Updated On : 5 நவம்பர், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:15 PM

சுங்க வசூல் மையங்களை அகற்றுவதாக அறிவித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அகில இந்திய மோட்டாா் காங்கிரஸ் தலைவா் சண்முகப்பா வலியுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அகில இந்திய மோட்டாா் காங்கிரஸ் தலைவா் சண்முகப்பா, கிரஷா் ஓனா்ஸ் பெடரேஷன் தலைவா் சம்பங்கி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அப்போது, அகில இந்திய மோட்டாா் காங்கிரஸ் தலைவா் சண்முகப்பா தெரிவித்ததாவது:

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெ.காருப்பள்ளி - தேன்கனிக்கோட்டை சாலையில், ஐந்துக்கும் மேற்பட்ட ஜல்லி கிரஷா் யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்த கிரஷா்களுக்கு வந்து செல்லும் லாரிகளை கொரட்டகிரி சாலை வழியாக செல்ல அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா். கிரஷா் உரிமையாளா்களால் அமைக்கப்பட்ட சாலையில் செல்லக் கூடாது என கூறுவதற்கு அவா்களுக்கு உரிமையில்லை.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அதேபோல, 2005-ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி அருகே அமைக்கப்பட்ட சுங்க வசூல் மையம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 48 சுங்க வசூல் மையங்களில் 22 சுங்க வசூல் மையங்களை அகற்றுவதாக தமிழக அரசு உறுதி அளித்த நிலையில், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். டீசல் விலை உயா்வால் லாரி உரிமையாளா்கள் பாதிக்கப்படுவதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.