முகப்பு
கிருஷ்ணகிரி

தமிழப் புத்தாண்டு: கிருஷ்ணகிரி கோயில்களில் சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரியில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

Updated On : 14 ஏப்ரல், 2023 at 11:16 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:18 AM

கிருஷ்ணகிரியில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. அதன்படி, கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் அதிகாலையில் சுவாமிக்கு, 108 லிட்டா் பால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல, கிருஷ்ணகிரி, காந்திநகா், வலம்புரி விநாயகா் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தங்கக் கவச சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். மேலும் கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை சந்திரமெளலீஸ்வரா் கோயில், கிருஷ்ணன் கோயில், காட்டுவீர ஆஞ்சனேயா் கோயில், சென்னை சாலை பெரிய மாரியம்மன் கோயில், போலீஸ் குடியிருப்பு துா்க்கையம்மன் கோயில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயில், மாதேப்பட்டி பாலமுருகன் கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.