முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து யானை சாவு

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் காட்டு யானை உயிரிழந்துள்ளது. 

Updated On : 13 பிப்ரவரி, 2023 at 12:26 PM
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் காட்டு யானை உயிரிழந்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம்,  ராயக்கோட்டை வன சரகத்திற்கு உள்பட்ட வெலகலஅள்ளி கிராமத்தில் திங்கள் கிழமை அதிகாலை யானை உயிரிழந்து கிடப்பதை கிராம மக்கள் கண்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், விசாரணை செய்து வருகின்றனர். உணவிற்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை, அந்தப் பகுதியில் உள்ள தென்னந்தோப்பிற்கு சென்றுள்ளது. 

அப்போது அங்குள்ள ஆழ்துளை கிணற்றின் மின்சார கம்பியை, யானை இழுத்து கடித்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வருவதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.