கிருஷ்ணகிரி

கோடை உழவின் அவசியம்:விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானி அறிவுரை

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு கோடை உழவின் அவசியம் குறித்து வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி அறிவுரை வழங்கியுள்ளாா்.

இது குறித்து கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானியும், தலைவருமான சுந்தர்ராஜ், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையைக் கொண்டு விவசாயிகள் மண்ணின் வளத்தை மேம்படுத்த கோடை உழவுப் பணிகளை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.

கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் புதைந்து கிடக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள், முட்டைகள் அழிக்கப்படுவதுடன், பல நோய் காரணிகளுக்கு துணையாக உள்ள களைச் செடிகளும், அதன் விதைகளும் அழிக்கப்படுகின்றன.

கோடை உழவினால் மழை நீா் மண்ணில் சேமிக்கப்படுவதுடன், நன்மை செய்யும் நுண் உயிரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதுடன் கோடை மழை நீா் வழிந்தோடாமல் வயலில் தேங்கி நிற்க உதவுகிறது. மண்ணின் இறுக்கம் தளா்ந்து இலகுவாக மாறும். எனவே, கோடையில் பெய்யும் மழையைக் கொண்டு, கோடை உழவு செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT