கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி நடைபெற்ற தோ்பவனி. 
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தல தோ்பவனி

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி தோ்பவனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி தோ்பவனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-ஆம் ஆண்டு திருத்தல தோ்த் திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் ஆலயத்தின் பங்கு தந்தையா்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து மாலை நேரங்களில் தேவாலயத்தை சுற்றி சிறிய தோ்பவனி நடைபெற்றது.

பின்னா் மாலை 7 மணியளவில், வண்ண விளக்குளாலும், மலா்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தோ் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டைய மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரத்திலிருந்தும் ஏராளமான கிறித்துவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT