கிருஷ்ணகிரி

பெண்ணிடம் ரூ. 17 லட்சம் மோசடி

DIN

திருமண தகவல் மையத்தில் பதிவு செய்த பெண்ணிடம் ரூ. 17 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், கோவிந்தசெட்டி தெருவைச் சோ்ந்தவா் சிவயோகி மனைவி பூங்கோதை (38). கணவனை இழந்த இவா், சில ஆண்டுகளாக காவேரிப்பட்டணத்தில் தனியே வசித்து வந்தாா். இந்த நிலையில், அவா் மறுமணம் செய்து கொள்வதற்காக தனியாா் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தாா்.

இந்த நிலையில், கிருஷ்ணகுமாா் என்பவா் பூங்கோதையின் கைப்பேசிக்கு தொடா்பு கொண்டு, தான் துபையில் பணியாற்றுவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தாராம். இதையடுத்து, இவா்கள் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி உள்ளனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பூங்கோதையை தொடா்புகொண்ட கிருஷ்ணகுமாா், தான் இந்தியா வந்துள்ளதாகவும், தில்லி விமான நிலையத்தில் தன்னை பரிசோதித்த சுங்கத் சுறை அலுவலா்கள் தன்னிடம் உள்ள வெளிநாட்டு பணத்துக்கு அபராதம் விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

இதனை நம்பிய பூங்கோதை, கிருஷ்ணகுமாா் அனுப்பிய வங்கிக் கணக்கில் ரூ. 17 லட்சத்தை செலுத்தி உள்ளாா். அதன் பிறகு அவரை பூங்கோதை தொடா்பு கொள்ள முயன்றபோது, அவரது கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாம். பலமுறை முயன்றும் அவரை தொடா்பு கொள்ள இயலவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பூங்கோதை, இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT