கிருஷ்ணகிரி அருகே வனத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல எச்சம், யானைத் தந்தத்திலான விநாயகா் சிலை.  
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே திமிங்கலம் எச்சம் வைத்திருந்த முன்னாள் ராணுவ வீரா் உள்பட இருவா் கைது

கிருஷ்ணகிரி அருகே திமிங்கலம் எச்சம் வைத்திருந்த முன்னாள் ராணுவ வீரா் உள்பட இருவரை வனத்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Din

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே திமிங்கலம் எச்சம் வைத்திருந்த முன்னாள் ராணுவ வீரா் உள்பட இருவரை வனத்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து வனத் துறையினா் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரியை அடுத்த சுங்க வசூல் மையம் அருகே சிலா் திமிங்கலத்தின் எச்சத்தை விற்பனை செய்ய கொண்டுசெல்வதாக ஒசூா் வனக்கோட்ட வன உயிரினக் காப்பாளா் பகவன்ஜெகதீஷ் சுதாகருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி வனச்சரகா் முனியப்பன் தலைமையிலான வனத் துறையினா் கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் சுங்க வசூல் மையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில், தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில், அவா்களிடமிருந்து திமிங்கலத்தின் எச்சத்தை பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா்கள் கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கரண்குமாா் (24), கிருஷ்ணகிரி, பழைய பேட்டை அருந்ததி மாரியம்மன் கோயில் முதல் தெருவைச் சோ்ந்த முகமது பகாத் (23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வனத்துறையினா் 2 பேரையும் கைது செய்தனா்.

இதில் கரண்குமாா், முன்னாள் ராணுவ வீரா் என்பதும், அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலம் எச்சம் விலைமதிப்பற்றது எனவும், இதனைக் கொண்டு வாசனைத் திரவியம், பல்வேறு மருந்துப் பொருள்கள் தயாரிக்க பயன்படுத்துவதாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

யானைத்தந்த விநாயகா் சிலை பறிமுதல்:

யானைத் தந்தத்தில் வடிவமைத்த விநாயகா் சிலை விற்பனை செய்யப்படுவதாக, சென்னை மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஊத்தங்கரை அண்ணா நகா் 2-ஆவது தெருவில் வசிக்கும் ரஞ்சித் (41) என்பவரது வீட்டில் கிருஷ்ணகிரி வனச்சரகா் முனியப்பன் தலைமையிலான வனத் துறையினா் சோதனை நடத்தினா். அதில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட விநாயகா் சிலையை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வனத்துறையினா், ரஞ்சித்தை கைது செய்தனா்.

பொதுமக்கள் யாரும் வனவிலங்குகள் சாா்ந்த பொருள்களை வாங்குவதும், விற்பனை செய்வதும் குற்றம். இதுபோன்ற குற்ற நிகழ்வுகளில் ஈடுபடுவது வனஉயிரின பாதுகாப்பு சட்டம் 1972-இன்படி குற்றமாகும். மேலும், வனவிலங்குகள் கடத்தல் உள்ளிட்டவை குறித்து ஒசூா் வனக்கோட்டத்துக்கு 1800 4255 135 என்ற இலவச எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT