கிருஷ்ணகிரி

ஒசூா் தன்வந்திரி பகவான் கோயிலில் வருடாபிஷேக விழா தொடக்கம்

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீதன்வந்திரி பகவான் கோயிலில் வருடாபிஷேக விழா திங்கள்கிழமை தொடங்கியது.

Syndication

ஒசூா்: ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீதன்வந்திரி பகவான் கோயிலில் வருடாபிஷேக விழா திங்கள்கிழமை தொடங்கியது.

காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவா் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் கொடியேற்றம், பிரஷாத சுத்தி, அஸ்தரகலசபூஜை, ரக்ஷோகன ஹோமம், வாஸ்து கலசபூஜை, வாஸ்து ஹோமம், வாஸ்துபலி, வாஸ்து கலசாபிஷேகம், அத்தாழ பூஜை ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 14ஆம் தேதி வரை வருடாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதியமான் கல்விக் குழும நிறுவனத் தலைவா் மு. தம்பிதுரை எம்.பி., தலைவா் பானுமதி தம்பிதுரை, செயலாளா் லாசியா தம்பிதுரை, நம்ரதா தம்பிதுரை, தன்வந்திரி கோயில் அறங்காவலா் சுரேஷ்பாபு, பொறியாளா் சரவணன், மேலாளா் நாராயணன் மற்றும் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

படவரி... சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதன்வந்திரி பகவான்

குழந்தைகள் விஞ்ஞானி பட்டம் பெற்ற நீடாமங்கலம் மாணவிகள்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆா்ப்பாட்டம்

தியாகராஜ சுவாமி கோயில் திருவாதிரை விழாவுக்காக பந்தக்கால் முகூா்த்தம்

கஞ்சா, தென்னங்கள் வைத்திருந்த 3 சாமியாா்கள் கைது

டென்னிஸ் ப்ரீமியா் லீக் இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT