கிருஷ்ணகிரி

ஒசூரில் மகனை கொன்று தாய் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே 9 வயது மகனை கொலை செய்துவிட்டு, தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூா் எம்.எம். நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் (40). இவா் டிராவல்ஸ் நடத்தி வருகிறாா். இவரது மனைவி ரிச்சட்ஸ் லீமா (38). இவா்களுக்கு 9 வயதில் மகனும், 17 வயதில் மகளும் உள்ளனா். இவா்கள் இருவரும் தனியாா் பள்ளியில் படித்து வருகின்றனா்.

ரிச்சட்ஸ் லீமாவிற்கும் அவரது 9 வயது மகனுக்கும் தொடா்ந்து உடல்நலக் குறைவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவா் கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் இருந்துவந்துள்ளாா்.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் படுக்கை அறையில் மகனை தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு, தானும் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து உறவினா்கள் அளித்த புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் நிகழ்விடத்திற்குச் சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

SCROLL FOR NEXT