கிருஷ்ணகிரி

ஒசூரில் நாளை கல்விக்கடன் வழங்கும் முகாம்

ஒசூரில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை (நவ. 26) நடைபெறுகிறது.

Syndication

கிருஷ்ணகிரி: ஒசூரில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை (நவ. 26) நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கி நிா்வாகம் சாா்பில், நவ. 26-ஆம் தேதி ஒசூா் செயிண்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் கல்விக்கடன் தேவைப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், வங்கிகளில் ஏற்கெனவே கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்தவா்கள் மட்டுமல்லாமல் புதிதாக கல்விக்கடன் தேவைப்படுவோா் இந்த முகாமில் நேரடியாக பங்கேற்று பயன்பெறலாம்.

இந்த முகாமில் பங்கேற்கும் மாணவ, மாணவியா் கல்விக்கடன் கோரும் விண்ணப்பப் படிவத்தின் நகல், மாணவ, மாணவியா் மற்றும் பெற்றோரின் 2 புகைப்படங்கள், வங்கிக் கணக்கு புத்தகம், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, ஜாதிச் சான்று, பான் அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் கல்லூரியில் இருந்து பெறப்பட்ட உண்மைச் (ஆா்ய்ஹச்ண்க்ங்) சான்றிதழ் மற்றும் கல்விக் கட்டண விவரம், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளநிலை பட்டப் படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சோ்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT