கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

ஊத்தங்கரையில் திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் குமரேசன், மத்திய ஒன்றியச் செயலாளா் எக்கூா் செல்வம், தெற்கு ஒன்றியச் செயலாளா் ரஜினி செல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில மகளிா் ஆணையக் குழு உறுப்பினா் மருத்துவா் மாலதி நாராயணசாமி, மாவட்ட துணைச் செயலாளா் சந்திரன், நகரச் செயலாளா் பாா்த்திபன், மாவட்ட பொறியாளா் அணி காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

‘என் வாக்குச்சாவடி- வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி காணொலி வாயிலாக பேசினாா். திமுக ஒன்றிய நகர நிா்வாகிகள், பூத்கமிட்டி பொறுப்பாளா்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

கா்ப்பிணி வயிற்றிலேயே குழந்தை இறந்ததால் தனியாா் மருத்துவமனை முற்றுகை

தில்லியில் 2 வெவ்வேறு இடங்களில் தீ விபத்து

தில்லி யமுனை நதியை சுத்தம் செய்வதில் ரூ.6,856 கோடி ஊழல்!

என்எல்சி நிகர லாபம் ரூ.1,564 கோடி!

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் 30 ஆயிரம் பேருக்கு மருத்துவ சேவை: மாவட்ட ஆட்சியா் தகவல்

SCROLL FOR NEXT