நாமக்கல்

கொந்தளம் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆய்வு

பரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலம் அருகே கொந்தளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதன்கிழமை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸார் ஆய்வு நடத்தினர்.

தினமணி

பரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலம் அருகே கொந்தளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதன்கிழமை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸார் ஆய்வு நடத்தினர்.

நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு கொந்தளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்தளார்.

இதன்படி, நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் பூபதிராஜா தலைமையிலான போலீஸார் புதன்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஊராட்சி மன்றம் சார்பில், செய்யப்பட்ட பணிகள், அதற்கான வரவு, செலவு கணக்குகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். புகாரின் பேரில் ஆய்வு செய்ததாக ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 3-இல் அண்ணா பிறந்த நாள் நெடுந்தூர ஓட்டப்போட்டி

வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் 12 பேருக்கு ரூ. 8.86 லட்சத்துக்கு கடனுதவி

பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

இந்தாண்டுக்கான சம்பா நெற்பயிருக்கு வரும் நவ.15-க்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்

வனப் பகுதியில் மண் சாலையை சமன் செய்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT