நாமக்கல்லில் நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் மாநாடு
நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் மாநாடு நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டை முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திசெல்வன் தொடக்கி வைத்தார்.
நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் மாநாடு நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டை முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திசெல்வன் தொடக்கி வைத்தார்.
இந்த மாநாட்டில், மத்திய அரசின் தூய்மை இந்தியா, அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டம், வீடுகள், முத்ரா கடன் திட்டங்கள், பிரதமரின் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டுத் திட்டங்கள், திறன் வளர்ப்பு, கௌசல் விகாஸ் யோஜனா, வேளாண்மை, சொட்டு நீர்ப் பாசனம், விவசாயிகளுக்கு இரு மடங்கு பயிர் உற்பத்தி உள்ளிட்டத் திட்டங்கள் குறித்து கல்லூரி, தனியார் நிறுவன வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.
தூய்மை இந்தியா திட்டத்தை நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாகக் கடைப்பிடித்து வரும் செல்வம் கல்லூரிக்கு அதற்கான பாராட்டுச் சான்றிதழ், விருது, புதிதாகச் சேர்க்கப்பட்ட நேரு யுவ கேந்திராவின் 375 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, தையல் மற்றும் அழகுக் கலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்கல்வி பயிற்சிகளை நிறைவு செய்த மகளிருக்கு அதற்கான சான்றிதழ்களை காந்திசெல்வன் வழங்கினார்.
இந்த நிகழ்வில் மத்திய அரசு வழக்குரைஞர் கே.மனோகரன், பாஜக மாவட்டத் தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி, நேரு யுவ கேந்திரா தேர்வுக் குழு உறுப்பினர் பி.முத்துக்குமார், மாவட்ட நேரு யுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளர் எம்.திருநீலகண்டன், ஜி.தவமணி, தூய்மை பாரதம் தூதுவர் எம்.ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.