முகப்பு
நாமக்கல்

மாவட்ட மைய நூலகத்தில் கோடை கால பயிற்சி வகுப்பு

நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் மாணவ, மாணவியருக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

Updated On : 15 மே, 2018 at 2:44 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் மாணவ, மாணவியருக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
நாமக்கல் கோட்டை சாலையில் செயல்படும் மாவட்ட மைய நூலகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவ , மாணவியருக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, கடந்த 6 ஆம் தேதி விரைவாக வாசிப்பதற்கான பயிற்சியும், 13 ஆம் தேதி கையெழுத்துப் பயிற்சியும், 14 ஆம் செஸ் பயிற்சியும் அளிக்கப்பட்டது. வரும் 19 ஆம் தேதி நினைவாற்றல் அதிகரிப்பற்கான பயிற்சி, 20 ஆம் தேதி யோகா பயிற்சி, 26 ஆம் தேதி ஓவியப் பயிற்சி, 27ஆம் தேதி குழந்தைகளுக்கு கதை சொல்லுதல் நிகழ்வும் நடக்கிறது.
இந்த பயிற்சி வகுப்புகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். மேலும், பயிற்சி முடிக்கும் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை மாவட்ட நூலக அலுவலர் பாலகிருஷ்ணன், வாசகர் வட்டத் தலைவர் ஜோதிலிங்கம், இரண்டாம் நிலை நூலகர் வேல்முருகன் ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.