முகப்பு
நாமக்கல்

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

பரமத்திவேலூர் வட்டம், பரமத்தியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள்

Updated On : 25 பிப்ரவரி 2019, 8:27 am IST
பகிர்:

பரமத்திவேலூர் வட்டம், பரமத்தியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்று விழா  நடைபெற்றது.
 பரமத்தி நகர தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் அப்துல்முனாப் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் மகபூப்ஷெரீப்  முன்னிலை வகித்தார்.  பேச்சாளர் கோவை செய்யது மனிதநேய மக்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் பாஷா, மாவட்டச் செயலாளர் சபீர், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுல்தான்பாஷா,தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக மாவட்ட பொருளாளர் சிராஜிதின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.