நாமக்கல்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

நாமக்கல் கோட்டை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

நாமக்கல் கோட்டை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாசி மகா சிவராத்திரியையொட்டி, நாமக்கல் கோட்டை தாந்தோணித்தெருவில் உள்ள ஸ்ரீபெரியாண்டவர், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் திருவிழா, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது. 
இதையொட்டி, சக்தி அழைத்தல், கன்னிமார் பூஜை, பெரியாண்டவர், அம்மன் பூஜைக்குப் புறப்பாடு, நள்ளிரவில் முப்பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.  செவ்வாய்க்கிழமையன்று, முனியப்பன், மதுரை வீரனுக்கு பூஜை நடைபெற்றது. 
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை கருப்பனார் சுவாமிக்கு பூஜை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT