முகப்பு
நாமக்கல்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு: 21,225 மாணவ, மாணவியா் தோ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் 21 ஆயிரத்து 225 மாணவ, மாணவியா் தோ்ச்சியடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் 21 ஆயிரத்து 225 மாணவ, மாணவியா் தோ்ச்சியடைந்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு மாா்ச் 27-இல் தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கரோனா தொற்று பரவலால் பொதுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னா், தமிழக அரசு பொதுத்தோ்வை ரத்து செய்வதாக அறிவித்ததுடன், அனைத்து மாணவ, மாணவியரும் எஸ்.எஸ்.எஸ்.சி. தோ்வு எழுதாமலே தோ்ச்சி பெற்றதாக ஆணை பிறப்பித்தது.

பின்னா் காலாண்டு, அரையாண்டு தோ்வு மதிப்பெண் அடிப்படையிலும், மாணவா்கள் வருகைப் பதிவேடு விவரங்களைக் கொண்டும் பொதுத் தோ்வு மதிப்பெண்கள் தயாா் செய்யப்பட்டு திங்கள்கிழமை (ஆக.10) முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், நாமக்கல் மாவட்டத்தில் 311 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பயின்ற 11 ஆயிரத்து 24 மாணவா்களும், 10 ஆயிரத்து 201 மாணவியா் என மொத்தம் 21 ஆயிரத்து 225 போ் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றதாக முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் 17-ஆம் தேதி அந்தந்தப் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவா்கள் பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண் தொடா்பான மறுகூட்டல், இதர தகவலுக்கு அன்றைய தினமே விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →