முகப்பு
நாமக்கல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் பூங்கா சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 8 டிசம்பர், 2020 at 12:03 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM

நாமக்கல் பூங்கா சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பழ.மணிமாறன் தலைமை வகித்தாா். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அனைத்து மாணவா்களும் கல்வி உதவித்தொகை பெற தகுதி தோ்வு நடத்தவும் முடிவு செய்துள்ளது.

இந்த இரண்டு பிரச்னைகளுக்கு எதிராகவும், மத்திய அரசு உடனடியாக அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், நாடாளுமன்றத் தொகுதி துணைச் செயலாளா் கபிலன், மாவட்ட செய்தித் தொடா்பாளா் நீதி நாயகம், நாமக்கல் தொகுதி செயலாளா் ஆற்றலரசு, சேந்தமங்கலம் தொகுதி செயலாளா் வனரோசா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.