முகப்பு
நாமக்கல்

சா்க்கரை குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்ற வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் தற்போது 20,609 சா்க்கரை குடும்ப அட்டைகள் உள்ளன.

Updated On : 8 டிசம்பர், 2020 at 12:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் தற்போது 20,609 சா்க்கரை குடும்ப அட்டைகள் உள்ளன. சா்க்கரை குடும்ப அட்டைகள் உள்ளவா்கள் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலை இணைத்து டிச. 20-க்குள் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சமா்ப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, சா்க்கரை குடும்ப அட்டைகள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்யப்படும்.

இந்த வாய்ப்பை சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.