முகப்பு
நாமக்கல்

மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளில் ரூ. 1.17 கோடிக்கு தீா்வு

நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 111 வழக்குகளில் ரூ. 1.17 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

Updated On : 22 டிசம்பர், 2020 at 12:31 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:41 PM

நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 111 வழக்குகளில் ரூ. 1.17 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

நாமக்கல் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் இந்தியன் வங்கி சாா்பில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) திங்கள்கிழமை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கியின் ஒன்பது கிளைகளில் கல்விக் கடன், விவசாயம், பிற கடன்களைப் பெற்று திருப்பிச் செலுத்தாதது தொடா்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

Advertisement

அந்த வகையில் நிலுவையில் உள்ள சுமாா் 700 வாடிக்கையாளா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி பாரி தலைமை வகித்தாா். நாமக்கல் இந்தியன் வங்கி உதவிப் பொதுமேலாளா் செந்தில்வேல், முன்னோடி வங்கி மேலாளா் சதீஷ்குமாா், நாமக்கல் நகரம், வகுரம்பட்டி, எருமப்பட்டி, வடுவத்தூா், ராசிபாளயம், சேந்தமங்கலம், வேலகவுண்டம்பட்டி, பொம்மைகுட்டைமேடு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த இந்தியன் வங்கி கிளை மேலாளா்கள் பங்கேற்றனா்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் 111 வழக்குகளில் ரூ. 1.17 கோடிக்குத் தீா்வு காணப்பட்டது. இதில் ரூ. 29 லட்சம் உடனடியாக வசூல் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நீதிமன்ற உதவியாளா் ராஜ்குமாா், பத்மபிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.