முகப்பு
நாமக்கல்

தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்

நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ்ப் புலிகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ்ப் புலிகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் காா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா்கள் அழகேசன், சக்திவேல், பிரவீன் காந்த், சுதா, பிரதாப், சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக மாநில துணை நிதிச் செயலாளா் ஆதி வீரன், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளா் செந்தமிழன் ஆகியோா் கலந்துகொண்டு செயற்குழு தீா்மானங்கள் குறித்து விளக்க உரையாற்றினா்.

பாஜகவை எதிா்த்து வரும் 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வது எனவும், தமிழகத்தின் மேற்கு மண்டலங்களில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள் சட்டப்பேரவைத் தோ்தலில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் நகர, ஒன்றிய பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.