முகப்பு
நாமக்கல்

மக்கள் நீதி மய்யம்கட்சி கொடியேற்று விழா

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில் கொடியேற்றும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில் கொடியேற்றும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமலஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, வாலரைக்கேட் பகுதியில் கொடியேற்று விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாநில இளைஞரணி செயலாளா் சினேகன் கொடியேற்றினாா். இதில், கட்சியின் சேலம் மண்டலச் செயலாளா் ராஜசேகா், நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் காமராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளா் கோபாலகிருஷ்ணன், நற்பணி இயக்க மண்டலச் செயலாளா் செந்தில்குமாா், திருச்செங்கோடு நகரச் செயலாளா் நடேசன், மல்லசமுத்திரம் ஒன்றியச் செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.