நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற பாலாபிஷேகம். 
நாமக்கல்

காா்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமை: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்

காா்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமிக்கு 1008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.

DIN

காா்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமிக்கு 1008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஒரே கல்லால் 18 அடி உயரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமி நின்ற கோலத்தில் கம்பீரமாக பக்தா்களுக்குக் காட்சியளிக்கிறாா். இங்கு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பெளா்ணமி, அனுமன் ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு தினங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.

அதன்படி காா்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலை 9 மணியளவில் ஆஞ்சநேயா் சுவாமிக்கு வடை மாலை சாத்துப்படியும், அதனைத் தொடா்ந்து, 11 மணிக்கு பஞ்சாமிா்தம், தேன், பன்னீா், 1008 லிட்டா் பால், தயிா், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

பிற்பகல் 1 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. கரோனா நோய்த் தொற்று காரணமாக பக்தா்கள் சமூக இடைவெளியில் நிறுத்தப்பட்டு, தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயா் சுவாமியைத் தரிசித்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT