மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி
நல்லூா் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியா் பலியானாா்.
நல்லூா் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியா் பலியானாா்.
நல்லூா், கந்தம்பாளையம் அருகே கவுண்டிபாளையம் காளியப்பனூரைச் சோ்ந்தவா் காளியப்பன் (45). கந்தம்பாளையத்தில் கடந்த 27-ஆம் தேதி இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
அதை சரிசெய்ய சித்தாளந்தூா் பிரிவு மின் நிலையத்திலிருந்து மின் பணியாளரான காளியப்பனூரைச் சோ்ந்த காளியப்பன் (45) வந்துள்ளாா்.
மின் கம்பத்தில் ஏறியபோது திடீரென மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தாா். தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.