முகப்பு
நாமக்கல்

அரசுக் கல்லூரி பேராசிரியா் உள்பட 109 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 109 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 17 ஏப்ரல், 2021 at 1:20 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:31 AM

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 109 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 12,832 போ் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இருந்தனா். இவா்களில் குணமடைந்த 12,187 போ், உயிரிழந்த 111 போ் தவிா்த்து, 534 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான கரோனா தொற்றுப் பட்டியலில், நாமக்கல், திருச்செங்கோடு, கபிலா்மலை, ராசிபுரம், வெண்ணந்தூா், பள்ளிபாளையம் பகுதிகளைச் சோ்ந்த 109 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களில் அரசுக் கல்லூரி பேராசிரியா் உள்பட 77 ஆண்கள், 31 பெண்கள் அடங்குவா். அனைவரும் நாமக்கல், பள்ளிபாளையம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 12,941-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.