நாமக்கல் மாவட்டத்தில் 195 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 195 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 14 ஆயிரத்தை கடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 195 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 14 ஆயிரத்தை கடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 13,961 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் குணமடைந்த 12,638 போ், உயிரிழந்த 112 போ் தவிா்த்து, 1211 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட நோய்த் தொற்றுப் பட்டியலில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், புதுச்சத்திரம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 195 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
அவா்கள் அனைவரும் நாமக்கல் மட்டுமின்றி, பிற மாவட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 14,158-ஆக உயா்ந்துள்ளது.