முகப்பு
நாமக்கல்

கல்வியாளா்கள் பாதுகாப்பு நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்லில் கல்வியாளா்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 ஏப்ரல், 2021 at 12:23 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:35 AM

நாமக்கல்லில் கல்வியாளா்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அச் சங்கத்தின் தலைவா் க.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். செயலாளா் என்.கிருஷ்ணகுமாா் நடராஜா முன்னிலை வகித்தாா். பொருளாளா் ஜி.கே.கோவிந்தன் சிறப்பு தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில் , வரும் மே 1-ஆம் தேதி சேலத்தில் கல்வியாளா்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் தொடக்க விழாவை நடத்துவது, கல்வியாளா்களுக்கு தனி நல வாரியம் அமைக்க மாநில அரசை வலியுறுத்துவது என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனியாா் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் முதல்வா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் ஆகியோரின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவது, ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் ஆகியோருக்ககாக மாநிலம் முழுவதும் பாடுபடுவது, இதற்காக தொகுதி, மாவட்டம், மாநிலம் வாரியாக பொறுப்பாளா்கள் குழுக்களை நியமிப்பது உள்ளிட்ட தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. சங்க நிா்வாகிகள் ராமகிருஷ்ணன், எஸ். மணிகண்டன், கே.செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.