முகப்பு
நாமக்கல்

அனுமதியின்றி மண் வெட்டியதாக 6 போ் கைது

நாமக்கல் அருகே அனுமதியின்றி மண் வெட்டி கடத்திய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 2 பொக்லைன் இயந்திரம், லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 1 மே, 2021 at 12:13 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:38 AM

நாமக்கல் அருகே அனுமதியின்றி மண் வெட்டி கடத்திய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 2 பொக்லைன் இயந்திரம், லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல்- துறையூா் சாலையில் கணவாய்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி சரளை மண் வெட்டி எடுப்பதாக நாமக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அங்கு சென்ற காவல் நிலைய ஆய்வாளா் குமாா், போலீஸாா் மண்ணை வெட்டியெடுத்த 6 பேரை சுற்றி வளைத்தனா்.

மேலும் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள், இரு டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்தனா். கனிம வளத்தை திருட முயன்ற வழக்கில் ஓட்டுநா்கள் முருகேசன், பாண்டியன், பெரியசாமி, ராஜரத்தினம், லோகநாதன், அரவிந்த் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.